ஸ்ரீ இராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா


ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர். செல்வா டயீட்டஸ் கலந்து கொண்டார். முதன்மை இயக்கு அலுவலர் ஸ்ரீ.வி.ராமகிருஷ்ணா முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். டி.நிர்மலா அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினர். இதைத்தொடர்ந்து, 10 முதுகலை பட்டதாரிகள் மற்றும் 98 இளங்கலை பட்டதாரிகளுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற முதுகலை நர்சிங் மாணவி பி.சிந்துஜா மற்றும் போஸ்ட் பேசிக் நர்சிங் மாணவி லியா, இளங்கலை நர்சிங் மாணவி கிருத்திகா உள்ளிட்டோருக்கு விருது மற்றும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் டாக்டர். செல்வா டயீட்டஸ் பேசுகையில், செவிலியர்கள் தங்களுடைய அறிவுத்திறனை மேன்மைபடுத்திக்கொள்ள சமீபத்திய தொழில் நுட்ப முன்னேற்றங்களை அறிந்து செயல்படவேண்டும். நாம் இலக்குகளை அமைத்து அவைகளை அடைய முயற்சிக்க வேண்டும்" என்றார்.

நிரைவாக துணை பேராசிரியர் சித்ரா ரவிக்குமார் நன்றியுரை ஆற்றினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...