' தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை மீறி நடைபெற்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தரும்' மாநிலச் செயலாளர் முத்தரசன் உறுதி.


வறட்சி பாதுகாப்புகள் குறித்து ஆய்வு அறிக்கையை தமிழக அரசு விரைவாக தாக்கல் செய்து பேரிடர் நிதியை மத்திய அரசிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
 கோவை சின்னியம்பாளையம் தியாகிகளின் 71 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு இடதுசாரிகள் சார்பில் அவர்களது நினைவு இடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்பாடு பொதுமக்களுக்கும், முகவர்களுக்கும் தான் இழப்பு என்பதால், பெட்ரோல் முகவர்கள் அறிவிப்பு சரியானது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த பல மாதங்களாக வறட்சி நிலவியதால் நம்பிக்கைக்குரிய பதில் அரசிடம் இருந்து வராததால் தான் விவசாயிகள் உயிரிழந்ததாக கூறிய அவர், விவசாயிகள் நோய்வாய், வயோதிகம் காரணமாக இறந்ததாக சில அமைச்சர்கள் கூறுவது கண்டனத்துக்குரியது என்றார்.

 விவசாயிகளை கொச்சைப்படுத்தும் செயல் என்றார். தமிழகத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் பணி வழங்க வேண்டும், தினமும் 400ரூபாய் கூலி, கடந்தாண்டு காப்பீட்டுத் தொகையையும், தனியாரிடம் இருந்து கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியவர் பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்தும் வர்தா புயலுக்கு முதற்கட்டமாக கேட்கப்பட்ட 1000 கோடி ரூபாயில் ஒரு பைசா கூட இதுவரை தராமல் தமிழக அரசுக்கு எப்போதும் உதவ தயார் என்று மத்திய அரசு கூறுவதை சுட்டிக்காட்டி சாடினார்.

 நீதிமன்றத்தை காரணம் காட்டி தமிழக பாஜக, பொன். ராதாகிருஷ்ணன் தவறான தகவலை கொடுத்து வருவதாக கூறிய அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை மீறி நடைபெற்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தரும் என்று உறுதியளித்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...