சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிவரும் குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் மக்கள் சேவை மையம்

தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றான நீலகிரியில் அமைந்துள்ள குன்னூருக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வருகைதருவர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சில உடைமைகளையும் தவறவிட்டுச் செல்வது அன்றாடம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.



இவ்வாறு மக்களால் தவறவிடப்பட்ட பொருட்களை மீண்டும் அவர்களிடமே சேர்த்திடும் வகையில் குன்னூர் சந்தை வியாபாரிகள் சங்கம் சார்பில் பொது மக்கள் சேவை என ஒரு சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இச்சேவை மையத்தினர், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துசெல்லும் சந்தை பகுதி, போட்ஹவுஸ், காட்சிமுனை, பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் தவறவிட்டுச் செல்லும் பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் விட்டுச் செல்லும் பொருட்களை வியாபாரிகள் சங்கத்தின் பொதுமக்கள் சேவை பிரிவில் ஒப்படைத்து விடுவர்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சந்தைப் பகுதியில் ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு கூறப்படும். பின், அதனை தவறவிட்ட நபர் உரிய அடையாளம் மற்றும் ஆவணங்களை காண்பித்து அதனை பெற்றுச் செல்லலாம்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...