போஷ் இந்தியா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து மருத்துவ பரிசோதனை முகாம்

போஷ் இந்தியா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் கொண்டையாம்பாளையம் பஞ்சாயத்து, சர்கார் சாமக்குளம் பகுதியில் புற்று நோய் மற்றும் பல் மருத்துவ மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. 



இம்முகாமில், அப்பகுதி கிராமவாசிகள் ஏராளமானோர் பங்கேற்று மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு பரிசோதனை செய்தனர். 

இதைத்தொடர்ந்து, மொபைல் பல் மருத்துவ வேன், பல் மருத்துவர்கள் பல் சுகாதார பரிசோதனைகளை கிராம மக்களுக்கு வழங்கினர். மேலும், இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பார்மசி சார்பில் இலவச மருந்துகள் விநியோகிக்கப்பட்டது.

இம்முகாமில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமவாசிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...