சங்கரா கல்வி நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது


சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் பாரம்பரியமானதுமான ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது. இந்த கையெழுத்து பிரச்சாரமானது இந்தியாவில் கால்நடை வளர்ப்போர் உரிமைகளைப் பாதுகாத்தல், வீர விளையாட்டுகளுக்கு ஊக்கம் கொடுத்தல் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டதாக இதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



இந்த கையெழுத்து பிரச்சாரத்தின் போது சங்கரா கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிறுவன வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிப்போம், ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டின் பெருமை, ஜல்லிக்கட்டுக்காக ஒன்றிணைவோம்" ஆகிய வாசகங்கள் எழுதியிருந்த பதாகைகளில் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.



இந்நிகழ்வில் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷ்ணன், சங்கரா மேலாண்மை அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் எச்.பரியேஷ், சங்கரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஆகியோர் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதை தங்களது கையெழுத்துகளை பதிவு செய்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், அக்கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள், நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...