சுகாதார வசதிகளை செய்து தராத மாநகராட்சியை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பாக மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது


கோவை மாநகராட்சியின் 75-வது வார்ட்டிற்குட்பட்ட உப்பிலியான் திட்டு பகுதி மக்கள் காலைக்கடன்களை கழிக்க பொது சுகாதார மையம் அமைத்து தர வேண்டி பல்வேறு மனுக்களை அளித்து வந்துள்ளனர்.

பொது சுகாதார மையம் கட்ட 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும் இதுவரை கழிப்பிடம் கட்டப்படாததால் அப்பகுதி மக்கள் அருகாமையில் உள்ள ரயில் தண்டவாளப் பகுதிகளை பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில் தங்கள் பகுதியில் சுகாதார வசதிகளை செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆதித்தமிழர் பேரவை தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலகம் முன்பாக மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பேசிய அவர்கள், உரிய சுகாதார வசதிகள் செய்யப்படாததால் ரயில்வே தண்டவாளங்களை காலை கடன்களை கழிக்க பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும், இதனால் ரயில்வேத்துறையின் அபராத  தண்டனைகளை ஏற்க வேண்டிய நிலை இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். 

மேலும் தங்கள் பகுதிக்காக ஒதுக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் என்னவானது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உடனடியாக பொது சுகாதார கழிப்பிடம் அமைத்துத் தர வேண்டும் எனவும் வலியுறித்தினர். 

இதையடுத்து மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...