குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்


சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு 8 லட்சத்து 77 ஆயிரத்து 58 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 5 லட்சத்து 71 ஆயிரத்து 340 பெண்களுக்கு விலையில்லா சேலையும், 5 லட்சத்து 58 ஆயிரத்து 496 ஆண்களுக்கு விலையில்லா வேட்டிகளையும் வழங்கிடும் வகையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.



கோவை மாவட்டம், கெம்பட்டி காலனி மாநகராட்சி சமுதாய கூட்டத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில், தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் முன்னிலையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். 

இவ்விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கி பேசுகையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை ஏழை, எளிய, சாமானிய மக்கள் சீரும் சிறப்போடும் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு, மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்திலுள்ள 8 லட்சத்து 72 ஆயிரத்து 722 அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்களுக்கும், 3,320 காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்களுக்கும் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள 1,016 இலங்கை தமிழர் குடும்பங்கள் என மொத்தம் 8 லட்சத்து 77 ஆயிரத்து 58 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் என ஆறு பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பும், 5 லட்சத்து 71 லட்சத்து 340 பெண்களுக்கு சேலைகளும், 5 லட்சத்து 58 ஆயிரத்து 496 ஆண்களுக்கும் வேட்டிகளும் வழங்கப்படவுள்ளது. 

தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விரைவாக வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுகுட்டி, ஒ.கே.சின்னராஜ், எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ், தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக மண்டல பொது மேலாளர் வெங்கடப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் எஸ்.மதுராந்தகி, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் சிங்கை எஸ்.பாலன், கோவை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ந.கருப்பசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...