ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமூகவலைதளம் மூலம் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்


ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்யக் கோரியும், கோவையில் சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்த கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. 

அதன் ஒருபகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய மாணவர்கள், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கவில்லை எனில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என தெரிவித்தனர்.

மேலும், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.



இதேபோல, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க சட்ட திருத்தம் செய்ய முன்வராத மத்திய அரசைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...