சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனம் சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் "மாணவர் நல விழா"

ஒரு பள்ளிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், கல்வித் தரத்தையும் உயர்த்தி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை குறைத்து, அரசுப் பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாய் உருவாக்குவதே சி.ஆர்.ஐ பம்ப்ஸ் பள்ளி வளர்ச்சி திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்தகைய உயரிய குறிக்கோளுடன் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனம் 9 கிராம அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து பள்ளிகளின் அடிப்படை தேவைகளை, பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிறைவேற்றி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 6ம் தேதியன்று கோவை அரசு மேல்நிலைப்பள்ளி சர்கார் சாமக்குளத்தில் "மாணவர் நல விழா" சிறப்பாக நடைபெற்றது.



பள்ளியின் தலைமை ஆசிரியை ரெ.சுப்புலட்சுமி வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியனை துவக்கி வைத்தார்.  à®‡à®¤à¯ˆà®¤à¯à®¤à¯Šà®Ÿà®°à¯à®¨à¯à®¤à¯, ஆசிரியை வே.தமிழரசி ஆண்டறிக்கையை வாசித்தார். 

இதைத்தொடர்ந்து, சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவன பொது மேலாளர் பி.ரவிச்சந்திரன் பேசுகையில், மாணவர்கள் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்களை உன்னிப்பாக கவனித்து கற்றுக்கொண்டு தேர்வுகளில் அதிகமான மதிப்பெண்களை பெற வேண்டும். 

அறிவின் தேடல் வாழ்நாள் இறுதிவரை இருக்க வேண்டும். எதிர்கால திட்டங்களை தீர்மானித்து இன்றிலிருந்தே அந்த குறிக்கோளை நோக்கி செல்ல முற்படுங்கள். திறமைகளை வளர்த்துக் கொண்டு சமூகத்தில் சிறந்த மனிதர்களாக வளம் வர வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி அவர் சிறப்பித்தார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.பழனிசாமி பேசுகையில், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் கோவில்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பல்வேறு நலத்திட்ட வசதிகளையும், உதவிகளையும் செய்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக இது உள்ளது. மேலும் நலத்திட்ட உதவிகள் தொடர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம், சமூக பொறுப்புணர்வு மேலாளர் எஸ்.ராஜா பேசுகையில், சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனம் மக்களுக்கும் சமூகத்திற்கும் செய்து வரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் எதிர்கால திட்டங்களையும், மாணவர்கள் பல வெற்றிகளை குவித்து வாழ்வில் வெற்றியடையுமாறும் வாழ்த்துரை வழங்கினார்.

இதைத்தொர்ந்து, பள்ளி மாணவர்களின் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...