' பொங்கல் பண்டிகையன்று தமிழர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும்' இயக்குனர் தங்கர்பச்சன்


வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையன்று  தமிழர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சன் கோவையில் ந்டந்த பொங்கல் விழாவில் உருக்கமாக பேசினார்.

கோவை ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழகறிஞர் சங்கத்தின் சார்பில்  இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இதன்  ஓரு பகுதியாக நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சன் கலந்து கொண்டு பேசினார்.தற்போது மக்கள் நல்ல உணவு கிடைக்காமல் நஞ்சு கலந்த உணவையே உன்னுவதாகவும் இதற்கு காரணம் விவசாய நிலங்கள் அழிக்கபட்டு மனைகளாக உருவாகி வருவதால் விவசாயம் அழிந்து வருவதாக பேசியவர் தற்பொழுது 60 சதவீதம் கழிப்பிட வசதிகள் இல்லாத நிலை உள்ளதாகவும் ஏவுகனை தயாரிப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு என செலவு செய்து வரும் அரசு விவசாயதிற்கு 3.5 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்குவதாகவும் அரசு வழங்கும் இலவச பொருட்களை வாங்க கையேந்தும் நிற்பது தான் தமிழனின் நிலை என்றார்.விவசாயிகளை காப்பாற்ற மத்திய அரடு திட்டம் போட்டு பணம் ஒதுக்குகிறது.ஆனால் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் திட்டங்களை செயல் படுத்துவதில்லை என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகளின் மரணத்தில் அக்கறையில்லாமல் பொழுது போக்கில் நாட்டம் கொண்டு தமிழர்கள் இருந்து வருகின்றோம் என தெரிவித்தார்.மேலும் வறட்சியால் 17  விவசாயிகள்  மட்டுமே உயிரிழந்ததாக தமிழக அரசு சொல்லுவது தவறானது எனவும் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் படி காவிரி நதி நீர் ஆணையம் அமைக்க மத்திய அரசை அனைத்து கட்சிகளும் ஓருங்கிணைந்து வலியுறுத்தவில்லை எனவும்  விவசாயிகளுக்கு பாதிப்பு வந்தால் பொதுமக்கள் அழிந்து போவார்கள் என தெரிவித்த தங்கர்பச்சன், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வறட்சியால் இறந்தவர்களின் உண்மையான கணக்கினை  வெளியிட வேண்டும் எனவும் அப்போதுதான் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய முடியும் எனவும் முழு நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின்  உயிரிழப்புகளை மறைப்பதால்  தமிழர்களுகும் தமிழகத்திற்கும்தான் பெரிய இழப்பு எனவும் தெரிவித்த அவர், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையன்று  தமிழர்கள் ஓவ்வொருவரும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.இப்போதைய சூழலில்  விவசாயிகளின் உயிரை பாதுகாப்பது முக்கியமானது எனவும், ஜல்லிகட்டும் அவசியம்தான் எனவும் தங்கர்பச்சன்  தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...