தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகள் கோவையில் இன்று துவக்கம்


கோவையில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 700 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

கோவையில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகள் இந்திய வலுதூக்கும் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியானது கோவை சித்ரா பகுதியிலுள்ள தனியார் அரங்கில் இன்று துவங்கி வரும் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நாடுமுழுவதும் 28 மாநிலங்களை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 18 முதல் 23 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 350 ஆண்கள் மற்றும் 150 பெண்களும், 40 முதல் 70 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மொத்தம் 200 வீரர் மற்றும் வீராங்கனைகள் என 700 பேர் இந்த போட்டிகளில் பங்குபெற உள்ளனர். இதன் முதல் நாளான இன்று 53 கிலோ மற்றும் 59 கிலோ எடைப் பிரிவினருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 66 கிலோ மற்றும் 120 கிலோ எடைப்பிரிவு என 9 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...