ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அவசரகால பிரசவ மருத்துவ பயிற்சி பட்டறை


ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை கவனிப்புகளை மேற்கொள்ள பிரசவம் மற்றும் மகப்பேரியல் துறையில் அமெரி்க்கன் குடும்ப மருத்துவர்களுடன் (ஏ ஏ எப் பி) மற்றும் ஜி வி கே இ எம் ஆர் ஐ (ஹைதராபாத்) ஆகியவை ஒருங்கிணைந்து அதிநவீன உயிர்காக்கும் திறன் பற்றிய பயிற்சி பட்டறையை நடத்தியுள்ளது.



இப்பயிற்சியை, சிகாகோவி்ன் பிரசன்ஸ் மறுவாழ்வு மருத்துவ மையத்தின் கல்வி இயக்குனர் டாக்டர் சஜினி தாமஸ், அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் தெரசா ஹப்கா மற்றும் டாக்டர் லைஸ் வெய்ஸ் பெர்க்கர் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களை ஜி வி கே இ எம் ஆர் ஐ நிர்வாக இயக்குனர்  à®Ÿà®¾à®•்டர் ராஜா நர்சிங் ராவ் ஒருங்கிணைப்பு செய்தார். இதில் கோவையை சேர்ந்த 40 டாக்டர்கள் இதில் பங்கேற்று, மகப்பேறியல் மருத்துவ பயிற்சி பெற்றனர்.

இந்த பட்டறை, தேசிய மகப்பேறு நலன் திட்டத்தின் முறையில் பயிற்சி திறன் வளர்ப்பு மேம்பாட்டின்படி நடந்தது. பிரசவ கால அவசர சிகிச்சை, அதில் மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கை, தற்போது ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள், புதிய கல்வி, கண்டுபிடிப்புகள் போன்றவையும் இடம் பெற்றன. பிரசவ அவசர சிகிச்சை மட்டுமின்றி, குழந்தை பிறப்புக்குப்பின் ஏற்படும் சிக்கல்கள், இழப்புகள் அவற்றை தவிர்த்தல் போன்ற பயி்ற்சிகளும் இடம் பெற்றன.

இருதய அறுவை சிகிச்சைக்கு பயன்படும் வகையிலான குறைந்தபட்ச கருவிகளைக் கொண்டு பிரசவ சிகிச்சையும் அளிப்பது பற்றி விவாதிக்கப்பட்டன. ரோபோட்டிக் சிகிச்சை போன்று அதிக நேரத்தை வீணடிக்காமல், அதிக செலவை ஏற்படுத்தாத சிகிச்சை முறை,  à®•ுறைந்தபட்ச கருவிகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்வது. இந்த சிகிச்சை முறையில் ஐந்து நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது பற்றியும் விளக்கப்பட்டன.

நிகழ்ச்சியை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் டீன் டாக்டர் சுகுமாறன் துவக்கி வைத்தார். இந்த பயிற்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற அனைவரும் பயனுள்ள பயிற்சி என பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பயிற்சி இயக்குனர் டாக்டர் சஜினி தாமஸ்க்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டு செயலாளர் டாக்டர் எம். பானுமதி நன்றி தெரிவித்தார்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...