தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு மற்றும் ரேக்ளா போட்டிநடத்த வேண்டுமென தி.மு.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


ஜல்லிகட்டு மற்றும் ரேக்ளா போட்டிகளுக்கு அனுமதி அளிக்காத மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக  à®¤à®¿.மு.க வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக தி.மு.க வின் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க வினர் கலந்து கொண்டனர். ரேக்ளா வண்டிகளிலும், கரும்புகளை ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க வினர், தமிழகத்தில் ஜல்லிகட்டு மற்றும் ரேக்ளா போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். 

ஆப்பாட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேசுகையில்; தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிகட்டு, ரேக்ளா போட்டிகள் நடத்தப்படும் எனவும், மத்திய மாநில அரசுகள் உரிய அனுமதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...