கிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் பாரம்பரிய விளையாட்டுகளுடன் பொங்கல் திருவிழா


கோவை கிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளை கல்வி குழுமங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பழங்கால விளையாட்டுகள் மற்றும் போட்டிகளில் இக்கல்விக் குழுமங்களின் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். கயிறு இழுத்தல், உறி அடித்தல் மற்றும் கண்ணாமூச்சி போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. 



இப்போட்டிகள் பழைய கலாச்சாரத்தினை, பழக்க வழக்கங்கள் மற்றும் முறைகளை எப்பொழுதும் பின்பற்ற வேண்டும் என்பதை உணர்த்தியது. கலாச்சாரத்தினை, நமது பாராம்பரிய விளையாட்டுக்கள், போட்டிகளை குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மறக்கக் கூடாது என்பதை இந்நிகழ்ச்சி எடுத்துரைத்தது. 



மேலும் கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உணவக மற்றும் விடுதி மேலாண்மைத்துறை பராம்பரிய உணவு வகைகளை அனைத்து அலுவலர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் மதிய உணவாக பரிமாறினர். மேலும் இக்கல்லூரியின் முதுநிலை சமூகப்பணித்துறை சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள நகலூர் மலைவாழ் கிராமத்தில் பொங்கல் நிகழ்ச்சிகளை நடத்தினர். 



இதில் இக்கல்லூரிகளின் முதல்வர்கள் ஜேனட், இரமேஷ், பாபாஞானகுமார், ராதிகா, மேலாண்மைத் துறை இயக்குநர் இராமகிருஷ்ணன், பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...