கோவை எட்டிமடை பகுதியில் தடையை மீறி நடைபெற்ற ரேக்ளா பந்தையம்

கோவை எட்டிமடை பகுதியில் ஐல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் மீதான தடையை நீக்கக்கோரி, தடையை மீறி ரேக்ளா ஆர்வலர்கள் ரேக்ளா ஊர்வலம் நடத்தினர்.


ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கோவையை அடுத்த எட்டிமடை பகுதியில் ஐல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் மீதான à®¤à®Ÿà¯ˆà®¯à¯ˆ நீக்கக்கோரி, ரேக்ளா ஆர்வலர்கள் ரேக்ளா வண்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் பாரம்பாரிய விளையாட்டு போட்டிகளான ஐல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்டவை மீதான தடை காரணமாக நாட்டு மாடுகள் அழிய வாய்ப்பிருப்பதாகவும், பீட்டா அமைப்பை தடை செய்வதுடன் ஐல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்டவை நடத்த நடவடிக்கை எடுக்க à®µà¯‡à®£à¯à®Ÿà¯à®®à¯†à®© ரேக்ளா ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் இப்போட்டிகளுக்கு அனுமதி வழங்கவில்லை எனில், தடையை மீறி நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர். 



இதையடுத்து தடையை மீறி 50 க்கும் ரேக்ளா வண்டிகளில் 4 கிலோ மீட்டர் தூரம் ரேக்ளா ஊர்வலம் நடத்தப்பட்டது. எட்டிமடை பகுதியில் துவங்கிய ரேக்ளா ஊர்வலம் கிராம பகுதிகள் வழியாக சென்று மீண்டும் எட்டிமடை பகுதியை அடைந்தது. தடையை மீறி ரேக்ளா ஊர்வலம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...