தமிழரின் பாரம்பரிய உடையில் சங்கரா கல்லூரியில் பொங்கல் திருவிழா

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவிற்கு சங்கரா கல்வி நிறுவனங்களின் செயலர் இராமச்சந்திரன், இணைச்செயலர் சந்தியா இராமச்சந்திரன், துணை இணைச்செயலர் நித்யா இராமச்சந்திரன் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.



பொங்கல் விழாவில், மாணவியர்களுக்குக் கோலப்போட்டியும், மாணவர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, உறியடித்தல் போட்டியும், கரகாட்டம், கோலாட்டம், பரதநாட்டியம், சிலம்பாட்டம், கலரிபயிட்று சிறப்பாக நடைபெற்றன.





துறைவாரியாகப் பொங்கல் போட்டியும் நடத்தப்பட்டது. மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் ஆசிரியர்களும் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்திருந்தது விழாவினை மேலும் சிறப்பாக்கியது.  





கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், துணைமுதல்வர் பெர்னார்டுஎட்வர்டு, அனைத்துத் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.





Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...