கோவையில் குடிநீர் தேவைக்கு 100 வார்டுக்கும் அவசர தொலைபேசி எண் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு


கோவை மாவட்டத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால் மாநகர பகுதியிலுள்ள பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அவசரம் மற்றும் அவசியத்தை கருதி குடிநீர் தேவைப்பட்டால் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டல அலுவலக தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால் குடிநீர் வாகனம் மூலம் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாவட்டத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக 140 வருடங்களுக்கு முன்னர் பருவமழை இல்லாத காரணத்தினால் கோவை மாவட்டத்தில் இது போன்ற வறட்சி காணப்பட்டது. இருந்தாலும் கோயம்புத்தூர் மாநகராட்சி போர்கால அடிப்படையில் தேவையான குடிநீர் விநியோகம் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும், அவசரம் மற்றும் அவசியத்தை கருத்தில் குடிநீர் தேவைப்பட்டால் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டல அலுவலக தொடர்பு எண்களான மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான தொலைபேசி எண்: 0422-2312267, ஜெயன்ராஜ் AE-9442104112, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான தொலைபேசி எண்: 0422-2551700, சத்தியமூர்த்தி AE-9489206000, ராஜேஸ் AE-9489206016, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான தொலைபேசி எண்: 0422-2591333, எழில் AE-9442501792, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான தொலைபேசி எண்: 0422-2243134, சக்திவேல் AE-9489206030, நாசர் AE-9442104104, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான தொலைபேசி எண்: 0422-2252482, சபரிராஜ் AE-9489206003, கனகராஜ் AE-9442501794, சரவணன் AE-9489206050 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் குடிநீர் விநியோக உதவி பொறியாளர்கள் கைபேசி எண்களை தொடர்பு கொண்டால் குடிநீர் வாகனம் மூலம் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும் குடிநீர் வாகனம் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். 

மேலும், கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களிலுள்ள 100 வார்டு பகுதிகளுக்கும் தொடர்ந்து நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனமானது சென்று தொடர்ந்து நாள் தோறும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் இந்த வாகனத்தின் மூலம் நாள் தோறும் மனுக்கள் பெறப்பட்டு வரும்போது அந்த வாகனத்தில் “குடிநீரை பொது மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், அவசரம் மற்றும் அவசியத்தை கருத்தில் கொண்டு குடிநீர் தேவைப்பட்டால் பொது மக்கள் மேற்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டால் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

17.01.2017 செவ்வாய் கிழமை அன்று கிழக்கு மண்டலம் வார்டுகள் - 32,33,34,35,36,37,56,57,58,59,60,61,62,63,64,65,66,67,69,75.

18.01.2017 புதன் கிழமை மேற்கு மண்டலம் வார்டுகள் - 5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19, 20,21,22,23,24.

19.01.2017 வியாழன் கிழமை தெற்கு மண்டலம் வார்டுகள் - 76,77,78,79,85,86,87,88,89,90,91,92,93,94,95, 96,97,98,99,100.

20.01.2017 வெள்ளி கிழமை வடக்கு மண்டலம் வார்டுகள் - 1,2,3,4,26,27,28,29,30,31,38,39,40,41, 42,43,44,46,47,55.

23.01.2017 திங்கள் கிழமை மத்திய மண்டலம் வார்டுகள் - 25,45,48,49,50,51,52,53,54,68,70,71,72,73,74, 80,81,82,83,84.

24.01.2017 செவ்வாய் கிழமை கிழக்கு மண்டலம் வார்டுகள் - 32,33,34,35,36,37,56,57,58,59,60,61,62,63,64, 65,66,67,69,75.

25.01.2017 புதன் கிழமை மேற்கு மண்டலம் வார்டுகள் - 5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19, 20,21,22,23,24.

27.01.2017 வெள்ளி கிழமை வடக்கு மண்டலம் வார்டுகள் - 1,2,3,4,26,27,28,29,30,31,38,39,40,41, 42,43,44,46,47,55.

30.01.2017 திங்கள் கிழமை மத்திய மண்டலம் வார்டுகள் - 25,45,48,49,50,51,52,53,54,68,70,71,72,73,74, 80,81,82,83,84.

31.01.2017 செவ்வாய் கிழமை கிழக்கு மண்டலம் வார்டுகள் - 32,33,34,35,36,37,56,57,58,59,60,61,62,63,64, 65,66,67,69,75.

மேற்கண்ட நாட்களில் அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனத்தின் மூலம் தொடர்ந்து நாள்தோறும் பொதுமக்களிடம் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...