ஏழு மாவட்ட விவசாயிகளுடன் விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடல்


கோயம்புத்தூர் மாவட்டம், சுற்றுலா மாளிகை கூட்டரங்கில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்ட விவசாயிகளுடன் விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நெடுஞ்சாலைகள், சிறுதுறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.  



இக்கூட்டத்தில் அமைச்சர்கள் விவசாயிகளின்  à®•ோரிக்கைள், விவாசாயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் வறட்சியிலிருந்து, வன விலங்கு மோதல்கள், அதை தடுப்பதற்கான வழிமுறைகள், குளங்கள் தூர்வாருதல் தொடர்பாகவும், வறட்சி நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 100 சதவிகிதம் நிவாரணத்தொகை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளுக்கு வறட்சியினை தாங்கி வளர்க்கூடிய பயர்களை விவசாயம் செய்ய வேண்டும். முதலமைச்சராக அம்மா இருந்தபொழுது எவ்வாறு விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் எடுத்தரோ, அதோ நிலைபாட்டில் தான் விவசாயிகளின் நலன்காக்கும் அரசாக இந்த அரசு தொடர்ந்து விளங்கும். அனைத்துப் பிரச்சனைகளிலும் நாங்கள் என்றும் விவசாயிகளுக்கு துணை நிற்போம் என அமைச்சர்கள் தெரிவித்தனர். 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...