பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு?


பவானி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியை அடுத்த தேக்குவட்டை என்ற இடத்திலும் மஞ்சக்கண்டி என்ற இடத்திலும் கேரள அரசு தடுப்பனை கட்ட முடிவு செய்துள்ளது. அணை கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.



இதற்காக அந்த பகுதிகளில் கட்டுமானப் பொருட்கள் குவித்து வைக்கபட்டுள்ளன. இந்த தடுப்பணையின் உயரம் 12 அடி அகலம் 30அடி நீளம் மற்றும் 200 அடி ஆழம் வரை இருக்கக்கூடும் à®Žà®© à®®à¯à®¤à®±à¯à®•ட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. கேரள அரசின் இந்த முயற்சியால் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் à®•டும் à®ªà®¾à®¤à®¿à®ªà¯à®ªà¯à®•்குள்ளாவர்.

முன்னதாக, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்திவைக்க அம்மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு இரு இடங்களில் தடுப்பணை கட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து, கேரள அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பிலும், ம.தி.மு.க சார்பிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...