பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி கேரள அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட ம.தி.க.வினர் கைது


தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்குவது பவானி ஆறு. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி கேரள மாநிலம் வழியாக மீண்டும் தமிழகத்திற்கு வரும் இந்த ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாக பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அம்மாநில அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பதும் தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு போராட்டங்களையடுத்து தற்காலிகமாக கைவிடப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக கேரள எல்லையான ஆனைக்கட்டியிலிருந்து 30 வது கிலோ மீட்டர் தொலைவில் பாலக்காடு மாவட்டம்  அட்டப்பாடி அடுத்த தாவளம் செல்லும் சாலையில் தேக்கோட்டை எனும் இடத்தில் சுமார் 12 அடி உயரத்தில் தடுப்பணை கட்டும் முதல்கட்ட பணியை துவங்கியுள்ளது கேரள அரசு. அதற்காக ஜல்லி, மணல், உள்ளிட்ட கட்டுமான பொருட்களை அங்கு குவித்துள்ள கேரள அதிகாரிகள்  ஜே.சி.பி இயந்திரத்தையும் நிறுத்தி வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து க.க.சாவடி பகுதியில் ம.தி.மு.க சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது கேரள அரசு பேருந்தை வழி மறித்ததுடன் ம.தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். முல்லைப்பெரியாறு, சிறுவானி ஆறு, பவானி ஆறு என தொடர்ந்து நீராதார பிரச்சிணைகளில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க.வை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...