அ.தி.மு.க கட்சியில் இருந்து விலகும் கோவை மாவட்ட மூத்த நிர்வாகி மலரவன்.


அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் கோவை மேயராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த அக்கட்சியின் மூத்த நிர்வாகியான மலரவன் அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மலரவன், அதிமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து அக்கட்சியில் இருந்து வருவதாகவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்த கட்சி தற்போது மிகவும் மோசமடைந்து இருப்பதாக தெரிவித்தார். ஜெயலலிதா தற்போது இல்லை என்ற தைரியத்தில் சசிகலா குடும்பத்தினர் கட்சியையும், ஜெயலலிதாவையும் நாங்கள் தான் காப்பாற்றினோம் என கூறி வருவதாகவும், சசிகலா குடும்ப ஆதிக்கம் பிடிக்காததால் அ.தி.மு.க.வில் இருந்து விலகி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். கட்சியை ஒரு குடும்பம் காப்பாற்ற முடியாது எனவும், மக்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு சசிகலாவிற்கு இல்லை எனவும் கூறிய அவர், 

அ.தி.மு.க.வில் சூடு சொரணையுள்ள உண்மையான தொண்டர்கள் நீடிக்க முடியாது என தெரிவித்தார்.  ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க.விற்கு இருந்த மக்கள் ஆதரவு தற்போது இல்லை எனவும், சசிகலா கூட்டங்களுக்கு மக்களை பணம் கொடுத்து அழைத்து வருவதாகவும் மலரவன் தெரிவித்தார். அ.தி.மு.க.வில் மூத்த நிர்வாகி சசிகலா குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி முதல் நபராக கட்சியில் இருந்து விலகியிருப்பது அ.தி.மு.க தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...