இந்தியாவில் தயாரிக்கபட்ட இலகு ரக விமானம் சூலூர் விமான படை தளத்தில் இணைக்கபடும் என விமான படை அதிகாரி தகவல்


இந்தியாவில் தயாரிக்கபட்ட தேஜாஸ் இலகு ரக விமானம் 2018-ல் சூலூர் விமான படை தளத்தில் இணைக்கப்படும்  என விமான படை அதிகாரி சுனில்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.



குடியரசு தினத்தின் ஒரு பகுதியாக சூலூர் படை தளத்தில் விமான படை செயல்பாடுகள் குறித்த கண்காட்சி மற்றும் செயல் விளக்கம் இன்று நடைபெற்றது.

தற்போது விமான சேவையில் உள்ள இந்தியாவில் 2003-ல் தயாரிக்கபட்ட நவீன இலகு ரக எம்.கே-1 ஹெலிகாப்டர், இங்கலாந்தில் 1964ல் தயாரிக்கபட்ட ஆரோ-748 விமானம், மணிக்கு 540 கி.மீட்டர் வேகத்தில் பொருட்களை ஏற்றி செல்லுதல், பயிற்சி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயணத்திற்கு உபயோகிக்கப்படும்  ஆண்டநோவ்-32 விமானம் மற்றும் ரஷ்யாவில் உருவாக்கபட்ட எம்.ஐ-17வி-5 ஆகியன கண்காட்சியில் இடம் பெற்றன.

மேலும், போர் மற்றும் கலவர காலங்களில் வீரர்கள் உபயோகிக்கும் ராப்ளிங் கயிறு, விளக்குகள், பாதுகாப்பு கவசங்கள் மற்றும் கூடாரங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.





இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக தீவிரவாத தாக்குதலின் போது விமான படை வீரர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பது குறித்த ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் இறங்கி தாக்குதல் நடத்தும் செயல் விளக்கம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதுகுறித்து சூலூர் விமான படை தள அதிகாரி ஏர் கமோடர் சுனில்குமார் கூறும்போது, சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்திய விமான படை செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கிலும் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக கூறினார்.

மேலும், இந்த கண்காட்சியில் 7000-கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கபடுவதாக கூறியவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகு ரக விமானம் 2018-ல் சூலூர் விமான படை தளத்தில் இணைக்கபடும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...