தனியார் துறையில் மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலவலகம் மற்றும் தேஜா சக்தி மகளிர் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து மகளிருக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜனவரி 25ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

கோவை கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள தேஜா சக்தி மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் அன்றைய தினம் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து கல்வித் தகுதி உடைய மகளிர் மட்டும் பங்கேற்க வேண்டும்.

இந்நிகழ்ச்சியில், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள முன்னணி தனியார் துறை வேலையளிப்போர் கலந்துகொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வுசெய்ய உள்ளனர்.

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் எவ்வித கட்டனமும் வசூலிக்கப்படமாட்டாது.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் பெருமளவில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...