மாநகராட்சி கட்டண கழிப்பிடங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்திலும் மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணங்கள் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிம இனங்களுக்கு மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். 

மேலும், மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்கள் அறிவிப்புப் பலகையில் நன்கு தெரியுமாறு வைக்கப்பட்டு, அறிவிப்பு பலகையில் குறிப்பிட்டுள்ள தொகையை மட்டுமே குத்தகைதாரர்கள் வசூல் செய்ய வேண்டும். 

மேலும், நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் குத்தகைதாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, குத்தகை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...