பீட்டாவிற்கு ஆதரவாக பேசிய சினிமா நடிகர்களை எதிர்த்து பேசிய நடிகர் ரஞ்சித்


கோவை வ.உ.சி மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நடிகர் ரஞ்சித் ஆதரவு தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஞ்சித்; தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பிட்டாவை தடை செய்யக்கோரியும் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் ஜாதி, மதம் இல்லாமல் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இனைந்து தமிழகம் முழுவதும் முதல்முறையாக வன்முறை இல்லாத போராட்டமாக நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தும் அரசியல் கட்சிகள் இல்லாமல் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும். மத்திய, மாநில அரசு இந்த பிரச்சனையை அரசியாலக்கப்பட்டும் தமிழர்களின் உணர்வையும்,  à®‰à®°à®¿à®®à¯ˆà®¯à¯à®®à¯ விளையாடுகிறது. ஆனால், இந்த போராட்டம் மாணவர்களால் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி எந்த ஒரு அரசியல் கட்சியும் தமிழர்களின் உரிமையை தகர்க்க முடியாது.

அதேபோல், பீட்டா அமைப்புக்கு ஆதரவாக பேசும் நடிகர்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இங்கு அவர்கள் பிழைத்தும் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டும்,  à®ªà¯€à®Ÿà¯à®Ÿà®¾à®µà®¿à®±à¯à®•ு உறுதுணையாக இருந்து கொண்டு டிவிட்டர் மற்றும் சமூக இணைய தளங்கள் மூலமாக பீட்டாவிற்கு ஆதரவு தெரிவிப்பது ஒரு கேவலமான ஒரு செயலாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் கோபங்களுக்கு விரைவில் அவர்கள் ஆளாகக் கூடுவார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...