ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பின் கொடும்பாவியை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்திய கோவை மக்கள்


ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பை கண்டித்து கோவை திருமலையாம்பாளையம் பகுதி பொதுமக்கள் பீட்டா அமைப்பின் கொடும்பாவியை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.



ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.



இந்நிலையில், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி கோவை திருமலையாம்பாளைய பொதுமக்கள் பீட்டா அமைப்பின் கொடும்பாவியை பாடையில் எடுத்து சென்று செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உடனடியாக ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் அல்லது முதல்வர் பன்னீர் செல்வம் பதவி விலக வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.





சட்டக்கல்லூரி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மத்திய தொலைத்தொடர்பு அலுவலகத்திற்குள் புகுந்து பீட்டாவை தடை செய்யவும், மத்திய மாநில அரசுகள் அவசர சட்டத்தை கொண்டு வர வலியுறுத்திம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரைமணி நேரம் போராட்டம் நடைபெற்றதால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.

கோவை தொப்பம்பட்டி மற்றும் சின்னத்தடாகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பீட்டா அமைப்பை தடை செய்யவும், ஜல்லிகட்டிற்கு உடனே அரசு ஆணை வழங்கவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் உண்ணாவிரதமிருந்தனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...