ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலத்தில் ஈடுபட்ட கோவை அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர்

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டினை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக இளைஞர்களால் அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

லட்சக் கணக்கான மாணவர்களின் தன்னெழுச்சியான இப்போராட்டத்திற்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள், பல தனியார் நிறுவனங்கள் என பலரும் தங்களது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



அதன் ஒருபகுதியாக கோவை அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் 200-க்கு மேற்பட்ட வங்கி அதிகாரிகள் ஊர்வலமாக சென்று கோவையின் தற்போது போராட்டக் களமாகிய வஉசி மைதானத்தில் போராடும் இளைஞர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் பொட்டலங்களை வழங்கினார்கள்.

இந்த ஊர்வலத்தினை கூட்டமைப்பின் அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினர் வணங்காமுடி மற்றும் கோவை மாவட்ட தலைவர் செல்வராஜ் முன்னின்று நடத்தினர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...