கோவை தெற்கு மண்டலம் நேதாஜி மக்கள் இயக்கத்தின் சார்பாக சவுக்கு சங்கரின் சேனலை முடக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தமிழ் சமூகத்தையும், நீதித்துறையையும், காவல்துறையையும் தரக் குறைவாக பேசி வரும் சவுக்கு சங்கரை கண்டித்தும், அவரது இணையதளத்தை முடக்க வேண்டும் என நேதாஜி மக்கள் இயக்கத்தினர் வலியுறுத்தினர்.



கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நேதாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை கண்டித்தும் அவரது இணையதளத்தை முடக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் மண்டிக் கிடக்கிறது என கடந்த ஜூலை 22-ஆம் தேதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சவுக்கு சங்கர் பேட்டி அளித்திருந்தார். அப்போது, ஒரு தீர்ப்பை விமர்சனம் செய்தது மட்டுமின்றி தனிப்பட்ட வகையில் நீதிபதி ஒருவரையும் விமர்சனம் செய்து பேசி இருந்தார்.

இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில், இவருக்கு எதிராக நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தாமாக முன் வந்து அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மன்னிப்பு கேட்க மறுத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.



இந்த நிலையில், கோவை தெற்கு மண்டலம் நேதாஜி மக்கள் இயக்கத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சவுக்கு சங்கரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



மேலும், தமிழ் சமூகத்தையும், நீதித்துறையையும், காவல்துறையையும் தரம் குறைவாக பேசு வரும் சவுக்கு சங்கர் மற்றும் அவரது இணையதளத்தை முடக்க வேண்டும் என நேதாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...