கேஎம்சிஎச் மருத்துவமனையின் சார்பில் உலக புற்றுநோய் தினம் அனுசரிப்பு


உலகம் முழுவதும் பிப்ரவரி 4ம் தேதியன்று யூனியன் ஆப் இன்டர்நேசனல் கேன்சர் கன்ரோல் என்ற அமைப்பினால் உலக புற்றுநோய் தினம் அனசரிக்கப்படுகிறது.

இதைமுன்னிட்டு கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையில் கையெழுத்து இயக்கம் இன்று நடத்தப்பட்டது. மேலும், இதன் ஒரு பகுதியாக உடல் பரிசோதனைக்கான புதிய திட்டம் ரூபாய் 999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கையெழுத்து இயக்கத்தை கேஎம்சிஎச் இயக்குநர் டாக்டர் அருன் பழனிசாமியுடன் இணைந்து கோவை நகர போக்குவரத்து இணை ஆணையர் எஸ்.சரவணன் இந்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

இதய நோய்களுக்குப் பிறகு புற்றுநோயே மனிதர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. உலக அளவில் புற்றுநோயால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போல இந்தியாவிலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்தியாவில் வருடத்திற்கு 18 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோயால் பதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அடுத்து வரும் 5 முதல் 10 வருடங்களில் இரட்டிப்பாகும் என கருதப்படுகிறது.

புற்றுறோயை கண்டறிவது, அதற்கு சிகிச்சை அளிப்பது ஆகிய துறைகள் மிகவும் வளர்ச்சியடைந்து விட்டது. தற்போதைய காலகட்டத்தில் 50 சதவிகித புற்றுநோயாளிகள் குணமடைகிறார்கள். இது 1970-களில் 25 சதவிகிதமாக இருந்தது.

புற்றுநோயை குணப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இந்நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அனைத்துவிதமான புற்றுநோய்களும் ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் குணமடைய வாய்ப்புள்ளது.

புற்றுநோயின் சிகிச்சையானது அறுவை சிகிச்சை, ரேடியோ தெரபி, கீமோ தெரபி உள்ளிட்ட மூன்றுவிதமாக சிகிச்சைகளை உள்ளடக்கியது. இவ்வனைத்துவிதமான சிகிச்சைகளும் இன்று மிகவும் முன்னேறியுள்ளது. இதனால், புற்றுநோயை மிகவும் துள்ளியமாகவும், பாதுகாப்பான முறையிலும் குணமாக்க முடியும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...