தேசிய கல்வி உதவித்தொகைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க அக்.31 கடைசி நாள் - மத்திய மனிதவள மேம்பாட்டு துறை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், 8ஆம் வகுப்புக்கு மேல் தங்கள் படிப்பை தொடர தேசிய கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க ஆன்லைனில் விண்ணப்பிக்க அக்டோபர் 31ஆம் கடைசி நாள் என அறிவிப்பு


டெல்லி: தேசிய வருவாய் மற்றும் தகுதியுடன் கூடிய கல்வி உதவித் திட்டத்தின் கீழ் படிப்பில் சிறந்து விளங்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, 8 ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்கள் தொடர்ந்து தங்கள் கல்வியை தொடர்வதற்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், ஆண்டுதோறும் 1 லட்சம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தேசிய கல்வி உதவித் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

தேசிய வருவாய் மற்றும் தகுதியுடன் கூடிய கல்வி உதவித் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்காக விண்ணப்பிப்பதற்கு இம்மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்கும் மாணவரின் பெற்றோர்களுடைய ஆண்டு வருமானம் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

தேசிய உதவித் தொகைக்கான தேர்வில் 55 சதவீத மதிப்பெண்கள் அல்லது 7ஆம் வகுப்பு தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் பட்டியலின மாணவர்களுக்கு மதிப்பெண் சலுகை அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...