கோவையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதன் ஒரு பகுதியாக பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்ட பிரச்சார வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு நிகழ்வாக மத்திய - மாநில அரசுகளால் அமல்படுத்தப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட பிரச்சார வாகன தொடக்க விழாவும் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு, பயிர் காப்பீட்டு திட்ட பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் பயன்கள் குறித்தான துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைத்தீர் கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், வேளாண்மை இணை இயக்குனர் சபி அகமது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...