கோவை கார் வெடிப்பு வழக்கு - கைதானோருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23 ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து முபினுடன் வெடி பொருட்களை காரில் ஏற்றியவர்கள் உட்பட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து சுமார் 100 கிலோ வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் ஜமேசா முபின் மற்றும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



உக்கடம், கோட்டைமேடு அடுக்குமாடி குடியிருப்பு, புல்லுக்காடு, ஜி.எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது.



மேலும் கோட்டைமேடு பகுதியில் வாகனத்தில் சென்றவாறு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...