கோவை கிழக்கு மண்டலம்‌ வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் புனரமைக்கும்‌ பணிகளை நேரில்‌ சென்று ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையாளர்‌

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண் 58க்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌, சேரன்‌ நகர்‌ பகுதியில் நடைபெற்று வரும் புனரமைக்கும்‌ பணிகளை நேரில்‌ ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ பணியாளா்களுக்கு அறிவுறை வழங்கினார்.


கோவை: கிழக்கு மண்டலம்‌ வார்டு எண் 58க்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌, சேரன்‌ நகர்‌ பகுதியில்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தை ரூ.5.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புனரமைக்கும்‌ பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



ஆர்‌.கே.கார்டன்‌ பகுதி, வார்டு எண்‌.57-க்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌, சிந்து நகா்‌ ஆகிய பகுதிகளில்‌ மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்‌ பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினார் பின்னர்‌, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து கேட்டறிந்தார்‌.



அதனைத் தொடர்ந்து, ஒண்டிப்புதூர்‌, ஆர்‌.கே.கார்டன்‌ பகுதியிலிருந்து சிந்து நகா்‌ வரை சுமார்‌ 350 மீட்டர் தொலைவிற்கு உடனடியாக தார்சாலை அமைத்திடவும்‌, பண்ணாரியம்மன்‌ குடியிருப்பு பகுதியில்‌ ஆழ்குழாய்‌ கிணறு அமைத்து, குடிநீர்‌ விநியோகம்‌ செய்திடவும்‌, புதிய தெருவிளக்குகள்‌ அமைத்து, அப்பகுதியிலுள்ள மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாரவும்‌ சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டர்.



பின்னர் அப்பகுதிகளில்‌ உள்ள வீடுகளில்‌ பொதுமக்கள்‌ தேக்கிவைத்த நீரில்‌ டெங்கு கொசு புழு உள்ளனவா என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேவையற்ற பொருட்களை அகற்றவும்‌, தேக்கி வைக்கும் நீரை சரியான முறையில்‌ மூடி வைக்கவேண்டும்‌ எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.

இந்த ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர்கள்‌ சுமித்ரா, சாந்தாமணி, மண்டல உதவி ஆணையர்‌ முத்துராமலிங்கம்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ முருகா, உதவி பொறியாளர்‌ யோகசித்ரா, சுகாதார ஆய்வாளர்‌ முருகேசன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள் பலர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...