கோவை சிங்காநல்லூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் தீப்பிடித்ததால் பரபரப்பு...!

சிங்காநல்லூர் அருகே கார் வந்த போது திடீரென்று காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. பின்னர், மளமளவென தீ பிடித்து எரியத் துவங்கியது. சூலூர் தீயணைப்பு துறையினர், உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சொக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இன்று இரவு இவர் தனது காரில் கோவையை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

அப்போது கோவை, சிங்காநல்லூர் அருகே வந்த போது திடீரென்று காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்த அவர், உடனே காரை நிறுத்தியுள்ளார். பின்னர், காரின் முன்பகுதியில் மளமளவென தீ பிடித்து எரியத் துவங்கியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சூலூர் தீயணைப்பு துறையினர், உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில், காரின் சில பகுதிகள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...