கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை கோவைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ள நிலையில், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.



கோவை: மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.



இக்கூட்டத்தில், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை வரவேற்பு, கட்சி சார்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கோவை மாவட்டத்தில் திமுக அலுவலகம் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் கட்சி செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கூட்டத்தில், கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக், ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகிப்பார்கள் எனவும் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கட்சி சார்பில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், நகர, பகுதி, ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...