கோவையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் சீண்டல் - பக்கத்து வீட்டு பையன் உட்பட இருவர் போக்சோ சட்டத்தில் கைது

கோவையில் கந்தே கவுண்டன் சாவடி அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் சீண்டல் கொடுத்து வந்த குணசேகரன் மற்றும் விஜய் ஆகியோரை போலிஸார் போக்சோவில் சட்டத்தில் கீழ் கைது செய்தது.


கோவை: கந்தே கவுண்டன் சாவடி அருகே பெற்றோர் இன்றி பாட்டி பராமரிப்பில் வசிக்கும் சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை தந்துள்ளனர் ஓட்டுநர்களான குணசேகரன் (25) மற்றும் விஜய் (22) ஆகியோர் இவர்கள் சிறுமியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி தங்களது அடக்கு முறைக்கு பயன்படுத்தியுள்ளனர்.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறுமி பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சதைரியமாக போலிஸாரிடம் தன் மீது நிகழ்ந்த பாலியல் வன்முறைக்கு காரணமான குணசேகரன் மற்றும் விஜய் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளார்.

சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கைதில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் ஓட்டுநர்களான குணசேகரன் (25) மற்றும் விஜய் (22) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்புடைய மூன்றாவது நபரை கைது செய்ய போலிஸார் கேரளா விரைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...