கோவையில் டெங்கு தடுப்பு முன் எச்சரிக்கை குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ தலைமையில் கலந்தாய்வுக்‌ கூட்டம்

கோவையில் டெங்கு தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த கலந்தாய்வுக்‌ கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவைமாநகராட்சி அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் தலைமையில்‌ கூட்டம் நடைபெற்றது. கோவையில் பெய்து வரும்‌ பருவமழை காரணமாக அனைத்து வார்டுகளிலும் தொடாந்து 3 நாட்களுக்கு துப்புரவு மற்றும்‌ டெங்கு தடுப்பு பணிகள்‌ Rapid Response Teams மூலம்‌ மேற்கொள்ளவும்‌, வார்டு பகுதிகளில்‌ வாரம்‌ ஒருமுறை காய்ச்சல்‌ முகாம்கள்‌ நடத்தவும் மாநகாரட்சி ஆணையாளர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.



மாநகராட்சியின்‌ அனைத்து வார்டுகளிலும் மழை நீர் தேங்காத வண்ணம்‌ பார்த்து கொள்ளவும்‌, வீடுதோறும்‌ டெங்கு தடுப்பு பணிகள்‌ மூலம்‌ கொசு புழுக்கள்‌ உள்ளனவா என்பதனை உறுதிபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வார்டுகளிலும் விநயோகம்‌ செய்யப்படும்‌ குடிநீரின்‌ தரம்‌ குறித்து சோதனை செய்திடவும்‌, அவற்றில்‌ ரேக்‌ தன்மை குறித்து உறுதிப்படுத்த அந்தந்த குழாய்‌ ஆய்வாளா்களுக்கும்‌,சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளா்களுக்கும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம்‌ என்பதால்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ குடிநீரை காய்ச்சி பருகவும், காய்ச்சல்‌ உள்ளிட்ட அறிகுறிகள்‌ தென்பட்டால்‌ உடனடியாக அருகில்‌ உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்‌ அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.



இக்கூட்டத்தில்‌ மாவட்ட சுகாதார துணை இயக்குநர்‌ அருணா, நகரா நல அலுவலர்‌ பிரதீப்‌ வாசுதேவன்‌ கிருஷ்ணகுமார்‌, அனைத்து மண்டல சுகாதார அலுவலா்கள்‌, சுகாதார ஆய்வாளாகள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலார்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...