கோவையில் முன்னாள் அதிமுக அமைச்சர்களை தெரியும் எனக்கூறி விஏஒ வேலை வாங்கி தருவதாக ரூ.2.17 கோடி மோசடி - ஒருவர் கைது

கோவையில் முன்னாள் அதிமுக அமைச்சர்களை தெரியும் எனக்கூறி 68 பேரிடம் சுமார் 2.17 கோடி ரூபாய் மோசடி செய்த ஆத்மா சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையை சேர்ந்தவர் ஆத்மா சிவக்குமார். முதலில் அதிமுகவில் இருந்த இவர் , தற்போது, வ.உ.சி பேரவையின் ஓருங்கிணைப்பாளராக இருந்து வருகின்றார்.

இவர் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஆர்.பி. உதயகுமார் ,எஸ்.பி. வேலுமணி ஆகியோரை தனக்குத் தெரியும் எனக்கூறி வந்துள்ளார். இந்நிலையில், தான், கிராம நிர்வாக அலுவலர் பணி உள்ளிட்ட பல்வேறு அரசு வேலைகளை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.

அவரது பேச்சை நம்பி இதுவரை கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 68 பேர் ஆத்மா சிவக்குமாரிடம் ரூ.2.17 கோடி வரை கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட ஆத்மா சிவக்குமார், வேலையும் வாங்கி தராமல் பணத்தை திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இவரிடம் ரூ.8.20 லட்சம் பணம் கொடுத்த மாரிச்சாமி என்பவர் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஆத்மா சிவக்குமார், அவரது மனைவி சத்யபாமா, ஜெய்கிருஷ்ணன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது கோவை குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த குற்றப்பிரிவு போலீசார், ஆத்மா சிவக்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...