கோவையில் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி முளைப்பாரி சுமந்தபடி ஊர்வலமாக சென்ற பெண்கள்

பெரியநாயக்கன் பாளையம் அருகேயுள்ள பாலகணபதி, பாலமுருகன், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, 50க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கஸ்தூரிபாளையத்தில் மணிகண்டன் பஜனைக் குழுவினரின் அருள் தரும் பாலகணபதி, பால முருகன், ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிசேக பெருவிழா நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேக பெருவிழாவை சாந்தலிங்க மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், சுயம்பிரகாச நந்தா சுவாமிகள் ஆகியோர் நடத்தி வைக்க உள்ளனர்.



இதனையொட்டி, முதற்கால வேள்வி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வீடுகளில் இருந்து முளைப்பாரி எடுத்து ஜாமப் இசையுடன் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...