கோவை சுந்தராபுரம் அருகே அடுத்தடுத்து 3 செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை - நள்ளிரவில் மர்ம நபர் கைவரிசை

சுந்தராபுரம் அருகே அடுத்தடுத்து 3 செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம், சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் புண்ணியகோடி. இவருக்குசாரதா மில் சாலையில் செல்போன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை மீண்டும் கடைக்கு வந்துள்ளார். அப்போது, கடையின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள்கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில்,கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சுமார் 12 மணியளவில் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த செல்போன்களை திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தது.



இதையடுத்து கடை உரிமையாளர் புண்ணியகோடி, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளுடன் போத்தனூர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.

புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர்.

இதனிடையே புண்ணியக்கோடி கடை மட்டுமின்றி அடுத்தடுத்து 2 செல்போன் கடைகள் பூட்டையும் உடைத்து மர்ம திருடிச் சென்றதும் தெரியவந்தது.

அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...