டேன் டீ நிறுவனத்தை மூடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் - கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

டேன் டீ நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது எனக் கூறுவது தவறான காரணம் என்றும், நிர்வாக சீர்கேட்டை சரிசெய்து தேயிலை தோட்ட கழகத்தை முழுமையாக இயக்க வேண்டும் எனவும் கூறினார்.



கோவை: டேன் டீ நிறுவனத்தை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, வரும், 17ஆம் தேதி கோவையில் சமூக நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற இருந்தது.

இதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்த நிலையில், மாநகர காவல் துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. எந்த அடிப்படையில் அனுமதி மறுக்கப்படுகிறது என விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம்.

நாளை மறுதினம் அனுமதி மறுத்தால், வேறு தேதியில் அனுமதி கொடுக்க வேண்டும். தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டால் உள்துறை செயலாளரை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது.

எங்கள் பேரணி அமைதியை நிலை நாட்டும் முயற்சி தான். கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை ஒட்டி கோவையில் அமைதியை தொடர்ந்து நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழக அரசு மாதம் ஒரு முறை மின் அளவீடும் முறையை அமல்படுத்த வேண்டும். இல்லை என்றால் இது தொடர்பாக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து, தொடர் போராட்டம் மேற்கொள்வோம்.

அதேபோல பீக் ஹவர்ஸ் சதவீதம் குறைப்பு ஒருபோதும் தொழில் நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படாது இது ஒரு ஏமாற்று வேலை.

தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட கழகத்தின் டேன் டீ தரமானது. மார்க்கெட்டிலும் நல்ல விலை போகக் கூடியது. இந்த தேயிலை தோட்டங்களில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர்.

தேயிலைத் தோட்டங்களில் வால்பாறையில் 600 குடும்பங்களின் வேலைவாய்ப்பை பறிக்க, கூடலூரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு தேயிலை கழகத்தை மூடுவது ஏற்புடையது அல்ல. இந்த முயற்சியை கைவிட வேண்டும். அது நட்டத்தில் இயங்குகிறது எனக்கூறுவது தவறான காரணம். நிர்வாக சீர்கேடு தான் காரணம், நிர்வாகத்தை சரி செய்து தேயிலை தோட்ட கழகத்தை முழுமையாக இயக்க வேண்டும்.

மேலும் 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு, 10% இட ஒதுக்கீடு குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...