கோவையில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தார்

சாலைக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்‌, மாநகராட்சி மூலம்‌ இணைப்புச்‌ சாலைகள்‌ ஏற்படுத்த மதிப்பீடுகள்‌ தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு ஆணையாளர் பிரதாப் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட சுங்கத்தில்‌ இருந்து உக்கடம்‌ வரை செல்லும்‌ புறவழிச்சாலை பகுதியில்‌ தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும்‌ மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்படும்‌ அணுகு சாலை அமைத்தல்‌ மற்றும்‌ தடுப்புச் சுவர்‌ அமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் நேரில்‌ ஆய்வு செய்தார்.

பாலத்தை ஓட்டி விபத்துக்கள்‌ ஏற்படுவதை தடுக்கும்‌ பொருட்டு அமைக்கப்படவுள்ள அணுகு சாலைக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்‌, மாநகராட்சி மூலம்‌ இணைப்புச்‌ சாலைகள்‌ ஏற்படுத்த மதிப்பீடுகள்‌ தயாரிக்கவும்‌ சம்பந்தப்பட்ட பொறியாளா்களுக்கு அவர் உத்தரவிட்டார்‌.



இதனைதொடர்ந்து மத்திய மண்டலத்திற்குட்பட்ட உக்கடம்‌ பகுதியில்‌ 127.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ உயர்மட்ட மேம்பாலப்பணியினை ஆய்வு செய்த ஆணையாளர் பிரதப், விரைவில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்‌.

அதனைத்‌ தொடாந்து, உக்கடம்‌ புல்லுக்காடூ பகுதியில்‌ புதிதாக வணிக கடைகள்‌ அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்து, அப்பகுதியினை நெடுஞ்சாலைத்துறையினர்‌ சமன்படுத்தி மாநகராட்சியிடம்‌ வழங்கவும் அவர் அறிவுறுத்தினார்‌.

பின்னர், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட புட்டுவிக்கி பகுதியில்‌ உள்ள ராஜவாய்க்கால்‌ தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு செய்து, பழுதடைந்த புட்டுவிக்கி சாலையை செப்பனிட உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

பின்னர்‌, வார்டு எண். 92-க்குட்பட்ட சுகுணாபுரம்‌ காமராஜா்‌ நகரில்‌ குறிச்சி, குனியமுத்தூர்‌ பகுதிகளில்‌ பாதாள சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை ஆய்வு செய்த ஆணையாளர் பிரதாப், பாதாள சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணிகளை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வுகளின்போது, துணை மேயர்‌ வெற்றிசெல்வன்‌, தெற்கு மண்டல தலைவர்‌ தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள்‌ அகமது கபீர்‌, அப்துல்‌ காதர்‌, பாபு, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர்‌ சுந்தரமூரத்தி, உதவி கோட்டப்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளார்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி பொறியாளர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...