அதிக சத்தத்துடன் கூடிய வெடிகளை வைத்து பாறைகளை உடைக்க கூடாது - கல்குவாரிகளுக்கு கிணத்துக்கடவு வட்டாட்சியர் எச்சரிக்கை

கிணத்துக்கடவு வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், விதிகளை மீறி செயல்பட கூடாது என்றும், அதிக சத்தத்துடன் கூடிய வெடிகளை வைத்து பாறைகளை உடைக்க கூடாது என கல்குவாரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட நெ.10 முத்தூர், குதிரையாலாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கல்குவாரிகளில் அதிக சத்தத்துடன் கூடிய வெடிகளை வைத்து பாறைகளை உடைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல் விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் கனரக வாகனங்கள்இயக்கப்படுவதால் சாலைகள் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்து இருந்தனர்.

இதுதொடர்பாக கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்றிரவு வட்டாட்சியர் மல்லிகா தலைமையில் விவசாயிகள் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் இடையேயான ஆலோசனை கூட்டம்நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட விவசாயிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதில். அரசின்விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுகின்றன. அதிக சத்தம் கொண்ட வெடிகளை வைத்து பாறைகளை உடைக்கப்படுகின்றன.

இதன் காரணமாக வீடுகளில் சேதம் ஏற்படுவதோடு, விலை நிலங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பாறை கற்கள் கொண்டு செல்வதால் தார் சாலைகளும் சேதமடைந்து குண்டு குழியுமாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக கல்குவாரி உரிமையாளர்களிடம் பேசிய வட்டாட்சியர், அரசின் விதிகள் படி கல்குவாரியை இயக்க வேண்டும். அதிக சத்தத்துடன் கூடிய வெடிகள் வைக்க கூடாது. விளைநிலங்கள் பாதிக்காத வகையில் பாறைகளை உடைக்க வேண்டும் என்று கல்குவாரி உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...