கோவை ரத்தினபுரியில் தொடரும் இருசக்கர வாகன உதிரிபாக திருட்டு - ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை

ரத்தினபுரி மாணிக்கவாசகம் நகரை சேர்ந்த சரவணன் என்பவரது இருசக்கர வாகனத்தின் உதிரிபாகம் திருடப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நபரை போலீசாரிடம் பிடித்து கொடுத்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் ரத்தினபுரி சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகன உதிரிபாகங்கள் திருடப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக போலீசாரும் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கோவை மாணிக்கவாசகம் நகரை சேர்ந்த சரவணன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் வழக்கம்போல் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.



மறுநாள் காலையில் பார்த்த பொழுது வாகனம் சேதமடைந்து அதன் உதிரி பாகங்கள் மட்டும் திருடு போய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



இதுதொடர்பாக சரவணன் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.



சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் இரண்டு நபர்கள், பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்து உதிரிபாகங்களை திருடியது தெரியவந்தது.



மேலும் திருடிச் சென்றவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் சிவானந்த காலனி அண்ணா நகர் பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளது.



இந்நிலையில் போலீசார் அங்கு சென்று விசாரித்த பொழுது சிசிடிவி காட்சிகளில் திருடிச் சென்ற நபரே அங்கு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை பிடித்த சரவணன் அவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் போலீசார் அந்த நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...