கோவையில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை - ஒருவர் கைது

பெரியநாயக்கன்பாளையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பான ரோந்து பணியின் போது, பிரஸ்காலனியை சேர்ந்த துரை கணேஷை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், பில் புக், ரூ.250 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை சிலர் விற்பனை செய்து வருவதாக பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் இந்திரா வணிக வளாகம் பகுதியில் நேற்றைய தினம் பெரியநாயக்கன்பாளையம் காவல் உதவி ஆவாளர் முரளி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்துள்ளார்.

விசாரணையில் அவர் பிரஸ்காலனி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த துரை கணேஷ் என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிவந்து திருட்டுத் தனமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து, 3 கேரள லாட்டரி டிக்கெட்டுகள், பில் புக், 250 ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...