நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் சுற்றுலா மையமாகவும், அறிவுசார் மையமாகவும் மேம்படுத்தப்படும் - திருப்பூரில் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

திருப்பூரில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சரணாலயத்திற்கு அருகே கடந்த அதிமுக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் உள்ள நஞ்சராயன் குளம் தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயமாக தமிழக அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, நவீன கருவிகள் மூலம் பறவைகள் சரணாலயத்தில் உள்ள வெளிநாட்டு பறவை இனங்களை பார்வையிட்ட அமைச்சர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினார்.



இதையடுத்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,



வெளிநாட்டு பறவை இனங்கள் 126 வகை பறவைகள் வந்து செல்லக்கூடிய வகையில் அதற்கு ஏற்றார் போல் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. தமிழக அரசு இதனை 17வது சரணாலயமாக அறிவித்து 7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நஞ்சராயன் குளம் முழுமையான பொதுமக்கள் பார்வையிட்டு பயன்படுத்தக்கூடிய இடமாக பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. பறவைகள் சரணாலயமாக மட்டுமல்லாது சிறந்த சூழல் சுற்றுலா மையமாகவும் நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் கொண்டு வரப்படும்.

உதகையில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் போல பொதுமக்கள் தினசரி பொழுது போக்க வந்து செல்லும் இடமாக மாற்றப்படும். நஞ்சராயன் குளத்தில் உள்ள தண்ணீரை சுத்தகரிக்க பொதுப்பணித்துறை சார்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவை போதுமானதாக இல்லாத நிலையில் மாநகராட்சி சார்பாக மேலும் ஒரு சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டு உள்ளதால், கடந்த அதிமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தை மீண்டும் தமிழக அரசு பறவைகள் சரணாலயத்திற்காக கையகப்படுத்த தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...