திருப்பூரில் மாற்றுத்திறனாளி மகனின் வாழ்வாதாரத்துக்காக ஆவின் பால் பூத் அமைக்க உதவிட கோரி ஆட்சியரிடம் தந்தை மனு

காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மகனின் வாழ்வாதாரத்துக்காக நீதிமன்ற வளாகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் பூத் வைக்க உதவி செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு அளித்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் அங்குள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.



இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் அவரது இரண்டாவது மகன் அபினேஷ் (19) நூறு சதவீதம் மாற்றுத் திறனாளி ஆவார். இவரின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீதி மன்ற வளாகத்தில் ஆவின் பாலகம் அமைத்துக் கொள்ள உதவிடக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது இரண்டாவது மகன் அபினேஷ் (19) நூறு சதவீதம் மாற்றுத் திறனாளி. அவருக்கு காது கேட்காது. உணவு குழாய் சிறிதாக இருப்பதால் திரவ உணவு மட்டுமே அருந்தி வாழ்ந்து வருகிறார்.

மாற்றுத்திறனாளியான எனது மகனுக்கு தினமும் 250 முதல் 300 செலவாகிறது. எனது மகனுக்கு வாழ்வாதாரம் வேண்டி திருப்பூர் நிதிமன்ற வளாகத்தில் அரசின் உதவியுடன் ஆவின் பாலகத்தை தாங்கள் அமைத்து தர உதவிட வேண்டும்.



மேலும் ஒரு விபத்தில் எனக்கும் கால் முறிந்து விட்டது. எனவே எங்களது மகனின் வாழ்வாதாரத்தை காக்க ஆவின் பாலகம் அமைத்து தர உதவ வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...