கோவையில் உறவினர்களால் கைவிடப்பட்ட இறந்தவரின் உடலை மனிதாபிமான அடிப்படையில் அடக்கம் செய்த தலைமை காவலர்

கோவை அருகே உறவினர்களால் கைவிடபட்டு இறந்தவரின் உடலை தலைமை காவலர் ஒருவர் அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை கணுவாய் பகுதியை சேர்ந்தவர் லத்தீப் கட்டிட வேலை செய்து வந்த இவர் முதல் மனைவியை விட்டு பிரிந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரைஇரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் அவரும் திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டிற்கு சென்றுவிடார். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு லத்தீப்பின் 2-வது மனைவி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

தனியாக இருந்த லத்தீப் குடிபழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி பல பகுதிகளில் சுற்றி திறிந்த வந்த அவர், இறுதியாக பன்னிமடையில் உள்ள கோவில் வளாகம், பேருந்து நிறுதத்தம் ஆகிய இடங்களில் இரவு படுத்துக் கொள்வதும் பகல்நேரங்களில் கோவில்களில் கொடுக்கும் உணவுடன் பொது மக்களிடமும் உதவி கேட்டு சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு பன்னிமடை பேருந்து நிறுத்த நிழல் குடையில் படுத்திருந்த இவர்இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற தடாகம் போலீசார் லத்தீப்பின் உடலை கைபற்றிஅவரது மகளை தொடர்பு கொண்டுஇறந்த தகவலை சொல்லியுள்ளனர். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து இறந்து போன லத்தீப்பின் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்ய வசதி இல்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது.



இறந்த பிறகும் கைவிடபட்ட நிலையில் இருந்த லத்தீப்பின் உடலை இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்ய தடாகம் தலைமை காவலர் கிருஷ்ணன் முடிவெடுத்தார். அதனடிப்படையில் லத்தீபின் உடலை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளார். அவரது இந்த மனிதாபிமான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...