கோவை சூலூரில் 92 வயது மூதாட்டிக்கு நேரில் சென்று விவசாய ஊக்கத்தொகையை வங்கியில் நேரடியாக வழங்க வழிவகை செய்த வேளாண் நலத்துறை..!

சூலூரில் வயது முதிர்வு காரணமாக விவசாய ஊக்கத்தொகை வாங்க முடியாமல் இருந்த மூதாட்டிக்கு வேளாண் நலத்துறை சார்பில் வீட்டுக்கே சென்று விவசாய ஊக்கத்தொகையை நேரடியாக வழங்க வழிவகை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சூலூரில் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 13வது தவணைத் தொகை பெறுவதற்காக இ.கே.ஒய்.சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதன்படி அனைத்து விவசாயிகளும் தங்களது தொலைபேசி எண்ணை ஆதாரில் இணைக்க வேண்டும் என வேளாண் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து புதுப்பித்து வருகின்றனர். மேலும் வேளாண் நலத்துறை அலுவலகத்திற்கு வந்து புதுப்பிக்க முடியாத விவசாயிகளுக்கு நேரில் சென்று அவர்களுடைய ஆவணங்களை சரிபார்த்து புதுப்பிக்க வேண்டும் என வேளாண்மை நலத்துறை தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.



அதன் அடிப்படையில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக கண்ணம்பாளையத்தை சேர்ந்த 92 வயது மூதாட்டிக்கு, வேளாண் நலத்துறை மற்றும் தபால் துறை சார்பில் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று கைரேகையை பதிவு செய்து அவருடைய வங்கி கணக்கு பணத்தை செலுத்துவதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இ.கே.ஒய்.சி செய்து பணத்தை வங்கியில் கிடைப்பதற்கான வழிவகை செய்தனர்.



இது குறித்து மூதாட்டியின் பேத்தி கலைச்செல்வி பேசியதாவது, வீட்டிற்கு வந்து கிசான் திட்டத்தின் மூலம் அதிகாரிகள் விவசாய ஊக்கத்தொகை வழங்குவதற்கான வழிவகை செய்தனர். இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...