தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வென்ற கோவையை சேர்ந்த தலைமை காவலருக்கு எஸ்.பி வாழ்த்து..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் கோவிந்தராஜ் என்பவர், மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற தடகள போட்டியில், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு வெள்ளி பதக்கமும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும் வென்றார்.



கோவை: கடந்த மாதம் (நவம்பர்) 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மராட்டிய மாநிலம் நாசிக்கில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான தேசிய அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில், பங்கேற்ற கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் கோவிந்தராஜ் என்பவர், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு வெள்ளி பதக்கமும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும் வென்றார்.



இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தலைமை காவலர் கோவிந்தராஜை அவரது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.



காவல் துறையினரின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற காவலரை எஸ்பி நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளது மேலும் ஊக்கமளிப்பதாக காவலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...